வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நஜீப்பின் இரு வழக்கறிஞர்கள் விலகினர்!
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

நஜீப்பின் இரு வழக்கறிஞர்கள் விலகினர்!

கோலாலம்பூர், மே 22-

1எம்.டி.பி மற்றும் எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடுகள் குறித்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இன்று புத்ராஜெயாவிலுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (எஸ்.பி.ஆர்.எம்) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வழக்கறிஞர்களான ஹர்ப்பால் சிங் கிரெவால் மற்றும் எம்.ஆதிமூலம் அவரை பிரதிநிதிப்பதிலிருந்து விலகி கொண்டனர்.

நேற்று தாமான் டூத்தாவிலுள்ள நஜீப்பின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பிற்கு பின்னர் தாம் விலகிக்கொண்டதாக ஹர்ப்பால் உறுதிபடுத்தினார். தாமும் மற்றொரு வழக்கறிஞரான ஆதிமூலமும் நஜீப்பிற்கு வாதாடுவதிலிருந்து விலகிக்கொண்டதாக அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

நாங்களே விலகிக்கொண்டதாகவும் நஜீப் எங்களை நீக்கவில்லை என்றும் ஹர்ப்பால் கூறியுள்ளார்.

இதனிடையே, அவ்விருவருக்கும் பதிலாக நஜீப்பிற்காக வாதாடும் பொறுப்பை முன்னாள் தேசிய வழக்கறிஞரான டத்தோ முகமட் யூசோப் ஜைனால் அபிடின் மற்றும் 6 பேர் ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன