செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > சம்ப்டோரியாவை வீழ்த்தியது மன்செஸ்டர் யுனைடெட்
விளையாட்டு

சம்ப்டோரியாவை வீழ்த்தியது மன்செஸ்டர் யுனைடெட்

டப்ளின், ஆக. 3-
ஜோசெ மரின்யோ தலைமையில் சிறப்பாக விளையாடிவரும் மன்செஸ்டர் யுனைடெட் அணி புதிய பருவத்திற்கு முன்பான நட்புமுறை ஆட்டங்களில் சிறப்பான ஆட்டங்களை வெளிபடுத்தி வெற்றி களிப்புடன் நிறைவு செய்துள்ளது.

இன்று அதிகாலையில் டப்ளினிலுள்ள லேன்ஸ்டவுன் ரோட் அரங்கில் நடைபெற்ற நட்புமுறையிலான இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் சீரி 1 லீக்கில் விளையாடிவரும் சம்ப்டோரியா அணியை 2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைடெட் வீழ்த்தியது.
மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கான இருகோல்களை ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் ஹென்ரிக் மெக்காடேரியன், 81ஆவது நிமிடத்தில் ஜுவான் மாத்தா ஆகியோர் புகுத்திய வேளையில் சம்ப்டோரியா அணிக்கான ஒரே கோலை ஆட்டத்தின் 63ஆவது நிமிடத்தில் டெனிஸ் பிரேய்ட் புகுத்தினார்.

இந்த வெற்றியானது ஐரோப்பா சூப்பர் கிண்ண போட்டியில் ஸ்பெயினின் ஜாம்பவான் அணியான ரியல் மாட்ரிட்டை எதிர்கொள்ளவிருக்கும் மன்செஸ்டர் யுனைடெட்டிற்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது. குறிப்பாக, அண்மையில் செல்சியிலிருந்து மன்செஸ்டர் யுனைடெட்டில் இணைந்த நெமஞ்சா மாத்திச் முதல் 45 நிமிடங்கள் வரை விளையாடினார். யுனைடெட்டிற்கான தனது முதலாவது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அவர் இந்த வெற்றியால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

இதனிடையே, நட்புமுறை ஆட்டங்களில் மன்செஸ்டர் யுனைடெட்டின் வெற்றிகளால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் ஜோசெ மரின்யோ தனது விளையாட்டாளர்கள் தரம் வாய்ந்த விளையாட்டை வெளிபடுத்தியிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும், தனது அணியின் அந்தோணி மார்டியல் இண்டர் மிலானில் இரவல் விளையாட்டாளராக இணையக்கூடும் என கூறப்படும் வதந்தியில் உண்மையில்லை என்றும் வருகின்ற புதிய பருவத்தில் அவருக்கு யுனைடெட்டில் அதிக வாய்ப்புகள் அளிக்கப்படவிருப்பதாக கூறியுள்ளார். மார்ட்டியல், லுக்காகு, ராஷ்போர்ட் ஆகிய மூவரும் வெவ்வேறு விதமான விளையாட்டாளர்கள். அவர்கள் அனைவரும் தற்போது யுனைடெட்டிற்கு அதிகம் தேவைப்படும் விளையாட்டாளர்கள் என ஜோசெ மரின்யோ குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன