அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > 1எடிபியின் கடனைச் செலுத்த இபிஎஃப்பின் பணமா?
முதன்மைச் செய்திகள்

1எடிபியின் கடனைச் செலுத்த இபிஎஃப்பின் பணமா?

கோலாலம்பூர், ஆக. 4-

அபுடாபி அனைத்துலக பெட்ரோலிய முதலீட்டு நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய கடனுக்கு தொழிலாளர் சேம நிதி(இபிஎஃப்) அல்லது பெட் ரோனாஸின் பணத்தை அரசு செலவிடுமா என அமானா நெகாராவின் வியூகத் தலைவர் டாக்டர் சுல்கெப்லி அகமட் கேள்வி எழுப்பினார்.

மேற்கண்ட நிறுவனத்திற்கு 1எம்டிபி 60.27 கோடி அமெரிக்க டாலரையும் மேலும் 2.60 கோடி டாலரையும் ஜூல 31இல் செலுத்த வேண்டிருந்தது. ஆயினும், அதனைச் செலுத்தத் தவறியதால், அபு தாபி நிறுவனத்தை அந்தக் கடனைச் செலுத்த மேலும் 5 நாள் கால அவகாசத்தை அளித்திருந்தது.

எனினும், தேவையான பணத்தைச் சேகரிக்க சிக்கல் எழுந்துள்ளதால் அந்தக் கடன் ஆகஸ்டு மாதம் செலுத்தப்படும் என 1எம்டிபி தெரிவித்திருக்கிறது.  அந்த நிதிக்கு நிதியமைச்சு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதால், தேவையான பணத்தை அரசு சார்பு நிறுவனங்களிலிருந்து பெற வேண்டியிருப்பதால், சேமநிதி அல்லது பெட்ரோனாஸின் பணத்தை அரசு செலவிடும் என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக சுல்கெப்லி சுட்டிக் காட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன