செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > 5 நட்சத்திர கால்பந்து திருவிழா 2018! கிளந்தான் அணி சாம்பியன்
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

5 நட்சத்திர கால்பந்து திருவிழா 2018! கிளந்தான் அணி சாம்பியன்

கோலாலம்பூர், ஜூன் 12-

இந்திய சமுதாய இளம் காற்பந்து வீரர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வண்ணம் சிலாங்கூர் சுக்கிம் ஏற்பாட்டில் நடைபெற்ற 5 நட்சத்திர கால்பந்து திருவிழாவில் கிளந்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

இறுதியாட்டத்தில் கோலாலம்பூர் அணியை எதிர்கொண்ட கிளந்தான் அணி கடுமையான போராட்டத்திற்கு பிறகு 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி வாகை சூடியது. கலந்து கொண்ட அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதிகமான பயிற்றுநர்கள் கலந்து கொண்டிருக்கின்ற வேளையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புக்களை அவர்கள் அளிப்பார்கள் என சிலாங்கூர் சுக்கிம் கால்பந்து அணியின் மேலாளர் சிவக்குமார் தெரிவித்தார்.

5 நட்சத்திர கால்பந்து திருவிழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த காற்பந்து ஜாம்பவான் டத்தோ சந்தோக் சிங், மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன், சிலாங்கூர் சுக்கிம் தலைவர் இந்திரன் தங்கராசு உட்பட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக சிவக்குமார் மேலும் கூறினார்.

5 அணிகளை பிரதிநிதித்து நமது சமுதாய விளையாட்டாளர்கள் கலந்து கொண்ட இந்தத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன