கோலாலம்பூர், ஜூன் 12
மனிதவள மேம்பாட்டு நிதியில் வெ.30 கோடி முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அந்நிதியின் கீழ் பயிற்சியை வழங்கும் நிறுவனம் இன்று புகார் மனுவை சமர்பித்தது.

எம்ஏசிசி இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்யவதற்கு தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிப்பதாக எஸ்.ஜி.எடுக்கேஷன் குழும தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ கணேஷ் தெரிவித்தார்.

இந்த நிதியின் உயர் அதிகாரியும் வாரிய இயக்குநரும் சமீபத்தில் பதவி விலகினர். இருப்பினும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கு விசாரணை தொடர வேண்டும் என்று அவர் சொன்னார் என இணையத்தள பதிவேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிதியின் இயக்குன வாரிய உறுப்பினர்களுடன் ஏராளமான சங்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கில் பயிற்சி குத்தகைகள் வழங்கப்பட்டதால் இந்த ஊழல் நிகழ்ந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுகிறது. இது நமது உரிமை. ஊழல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான மக்களையே சென்றடைய வேண்டும் என இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தாம் சம்பந்தப்படவில்லை என அந்நிதியின் முன்னாள் வாரிய உறுப்பினர் ஆர்.தியாகராஜா குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சியை நடத்தும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் லெவி கட்டணம் மூலம் இந்த நிதி செயல்படுகிறதே தவிர மக்களின் பணத்தில் அல்ல என்று அவர் கூறினார்.

எனவே, இந்த விவகாரம் பற்றி விசாரிக்கும் பொறுப்பை அதிகாரிகளிடமே ஒப்படைக்கிறோம். இந்த நிதியில் தவறு நிகழ்ந்துள்ளதாக என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று அவர் கூறினார்.