முகப்பு > குற்றவியல் > 1எம்டிபி : துபாயில் ஜோ லோ? விசாரணைக்கு ஒப்புதல்!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

1எம்டிபி : துபாயில் ஜோ லோ? விசாரணைக்கு ஒப்புதல்!

கோலாலம்பூர், ஜூன்.14-

எம்டிபி நிதி முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களில் ஒருவரான தொழிலதிபர் ஜோ லோ, 1எம்டிபி விசாரணைக் குழுவினரை துபாயில் சந்திக்கவிருப்பதாகவும், அதன் சார்ந்த விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனினும், ஜோ லோவை சந்திப்பதற்கு முன்னாதாக 1எம்டிபி விசாரணைக் குழுவினர் ஜோ லோவின் வழக்கறிஞர்களுடன் சந்திப்பு நடத்தவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

1எம்டிபி விசாரணைக்கு எந்த வகையில் ஜோ லோ உதவலாம் என்பது குறித்து விசாரணைக் குழுவினர் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு முதலில் தெளிவுப்படுத்துவது அவசியம் என்று கருதுப்படுகின்றது.

கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத் ஆணையம் ஜோ லோவுக்கு எதிராக கைது ஆணையைப் பிறப்பித்திருந்தது. அதை அடுத்து, இண்டர்போல் அவரை அனைத்துலக குற்றவாளியாகவும் அறிவித்திருந்தது. அதனால், மலேசியாவுடன் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் நடைமுறையில் உடன்பாடு இல்லாத நாடுகளில் ஜோ லோ தலைமறைவாக இருந்து வந்தார்.

ஆகக் கடைசியாக அவர் ஒருவேளை ஆஸ்திரேலியாவில் அல்லது மக்காவில் இருக்கலாம் என ஆரூடங்கள் எழுந்தன. .இந்நிலையில், ஜோ லோ 1எம்டிபி விசாரணைக்கு ஒத்துழைப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன