சிறையில் ஓய்வு எடுத்துவிட்டேன்; இனி பணி தொடரும்-டத்தோஸ்ரீ அன்வார்

0
6

கோலாலம்பூர், ஜூன் 14
தாம் சிறையில் போதுமான அளவு ஓய்வு எடுத்துவிட்டதாகவும் இனி தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சிறையில் இருந்த போது போதுமான ஓய்வு கிடைத்து விட்டது. இனி பணியை தொடர வேண்டும். மக்கள் நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள். கொள்கைகளை அமல்படுத்தாவிட்டால் அவர்களின் ஆதரவு வீணாகிவிடும் என்று அவர் தனது முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார்.

நீங்கள் சுதந்திர மனிதராகிவிட்டீர்கள். இனி ஓய்வெடுங்கள் என்று அவருடைய மகள் நூருல் நுஹா கூறியிருப்பது அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.