புத்ராஜெயா, ஜூன் 18-
முழு அமைச்சரவைப் பட்டியல் இவ்வார இறுதியில் அறிவிக்கப்படும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

முழு அமைச்சரவைப் பட்டியலை வெளியிடுவதற்கு சற்று காலம் நீடிக்கும். அநேகமாக இவ்வார இறுதியில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் துன் மகாதீர் கூறியதாக மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சருமான அவர் கூறினார்.

குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சர்கள் அமைச்சர்கள் பட்டியலைப் பிரதமர் தயார் செய்வதோடு அதன் அறிவிப்பையும் அவரே செய்வார் என்று இன்று தமது அலுவகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.