வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் தேவை! – குவான் எங்
அரசியல்பொதுத் தேர்தல் 14

வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் தேவை! – குவான் எங்

சைபர்ஜெயா, ஜூன் 19-

கடந்த பொதுத்தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்பு நாட்டின் நிதி நிலைமை சீரடையும் வரை அரசுக்கு மக்கள் கால அவகாசம் கொடுப்பார்கள் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது நாட்டின் கடன் தொகை வெ.1 லட்சம் கோடியாக இருப்பதால் நிதி நிலைமை மோசமாக இருக்கிறது.  இதில் எங்களின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இன்னமும் உறுதியுடன்தான் நாங்கள் இருக்கிறோம். இருந்த போதிலும் இப்போது பெரிய கடன் தொகையில் இருப்பதோடு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு ஏதுவாக நிதி நிலையை சீர் செய்ய வேண்டியது அவசியமாகும்.

நாட்டில் ஜிஎஸ்டியை அகற்றுவதில் அரசு இன்னமும் தனது கடமைகளை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறது என ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன