அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > டான்ஸ்ரீ நடராஜாவிற்கு எதிராக பேசவோ கோஷம் எழுப்பவோ கூடாது! நீதிமன்றம் இடைகால தடை உத்தரவு!
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

டான்ஸ்ரீ நடராஜாவிற்கு எதிராக பேசவோ கோஷம் எழுப்பவோ கூடாது! நீதிமன்றம் இடைகால தடை உத்தரவு!

பத்துகேவ்ஸ், ஜூன் 21-

ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவாஸ்தானத்திற்கு எதிராக பதிவு பெறாத அமைப்பான ஆகம ஆர்மி நடத்தும் பேரணியில் அதன் தலைவர் உட்பட யாரும் டான்ஸ்ரீ நடராஜாவிற்கு எதிராக பதாகைகளை ஏந்தவும், கோஷம் எழுப்பவும் கூடாது என நீதிமன்றம் இடைகால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதற்கான நீதிமன்ற உத்தரவு கடிதத்தை டான்ஸ்ரீ நடராஜா செய்தியாளர்களின் பார்வைக்கு கொண்டு வந்தார். அதோடு சட்டவிரோத அமைப்பான ஆகம ஆர்மியின் கீழ் செயல்படுவது சட்டத்திற்கு விரோதமானது என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 24ஆம் தேதி பத்துமலை வளாகத்தில் ஆறுமுகம் துரைசாமி (அருண் துரைசாமி) தலைமையில் டான்ஸ்ரீ நடராஜாவுக்கு எதிராகப் பேரணி நடக்கிறது. குறிப்பாக, தலைவர் பதவியிலிருந்து தாம் விலக வேண்டும் என ஆகம ஆர்மி தலைவருமான அருண் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கூறி வருகிறார். அதோடு, ஒவ்வொரு நாளும் பல்வேறான உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களையும் அவர் முன் வைக்கிறார்.

இதனால், மக்கள் குழம்பி விடக்கூடாது. குறிப்பாக சட்டவிரோதமான அமைப்பு, நடத்துவது பேரணி கிடையாது. அதனால் மாரியம்மன் தேவஸ்தானம் போலீஸ் புகாரையும் மேற்கொண்டு நீதிமன்ற தடை உத்தரவையும் பெற்றிருப்பதாக டான்ஸ்ரீ நடராஜா கூறினார். அருண் துரைசாமி கருப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஒரு அமைப்பிற்கு அவர் தலைவராக இருக்க முடியாது. அப்படி இருக்கையில் இம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டத்திற்கு புறம்பானது என டான்ஸ்ரீ நடராஜா எச்சரித்தார்.

முன்னதாக, அன்றைய தினம் தேசிய போலீஸ் படை பத்துமலைக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பணியில் ஈடுபடுவார்கள். ஆலயத்திற்கு வெளியே பேரணி நடந்தால் அதனை போலீஸ் கவனித்து கொள்ளும். ஆலயத்திற்கு உள்ளே நுழைந்து பதாகைகளையோ அல்லது தலைவருக்கு எதிராக கோஷங்களையோ எழுப்பினால் அது நீதிமன்ற தடையை மீறுவதற்கு சமம் என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

ஆலயத்தின் உள்ளே ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான உறுப்பினர்கள் உட்பட தேவஸ்தானத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் 30க்கும் மேற்பட்ட பொது இயக்கங்களின் பிரதிநிதிகளும் இருப்பார்கள். இச்சூழ்நிலையில் உள்ளே வந்து தேவஸ்தானத்திற்கு எதிராக செயல்பட்டால் ஏதாவது அசம்பாவிதம் நடக்கவும் வாய்ப்புண்டு. இது குறித்தும் போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் இந்த சட்ட விரோத பேரணிக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

ஆலயத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதை தேவஸ்தானம் தடுக்காது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி கோஷம் எழுப்புவதோ, பதாகைகளை ஏந்துவதோ நடக்கக்கூடாது என டான்ஸ்ரீ நடராஜா எச்சரித்தார். நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

தேவஸ்தானம் குறித்து விளக்கம் பெற விரும்புவோர்கள் நேரடியாக நீதிமன்றத்தை நாடலாம். அதை விடுத்து தேவஸ்தான நிர்வாகம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை குறை கூறுவது தவறானதாகும். ஏதேனும் விளக்கம் வேண்டும் என்றால் நேரடியாக எங்களை அணுகலாம் என்று பலமுறை கூறி விட்டோம். ஆனால், சிலரை பின்னணியில் வைத்துக் கொண்டு தேவஸ்தானத்திற்கு எதிராக நடவடிக்கையை முன்னெடுப்பது மிகவும் தவறு. இதை பொதுமக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

ஆலயத்தின் நிலைப்பாடு, உண்டியல் கணக்கு என அனைத்தையும் சரியாக வைத்துள்ளோம். இங்கு தவறு நடக்க வாய்ப்பே இல்லை. அப்படி இருக்கையில் பொய் பிரசாரங்களுக்கு எங்கிருந்து இடம் கிடைத்தது. 1930ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டத் திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. அனைத்தும் வெளிப்படையான விஷயங்கள்தான். இதில் ஒளிவுமறைவிற்கு இடம் இல்லை என ஆலயத்தின் பொருளாளர் அழகன் கூறினார்.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பொய் பிரசாரங்களை நம்பி தவறான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. டான்ஸ்ரீ நடராஜாவின் தலைமைத்துவத்தில் பத்துமலை உருமாற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, உலகமே வியக்கும் விதமாக பத்துமலை திகழ்கிறது. இதற்கு யாரும் பங்கம் விளைவிக்கக்கூடாது என ஆலயத்தின் செயலாளர் சேதுபதி கூறினார்.

One thought on “டான்ஸ்ரீ நடராஜாவிற்கு எதிராக பேசவோ கோஷம் எழுப்பவோ கூடாது! நீதிமன்றம் இடைகால தடை உத்தரவு!

 1. கோலாலம்பூர் பத்துமலை
  திருமுருக ஆலயத் தலைவர்
  மற்றும்
  நிருவாகத்தினர்களுக்கு
  நன்றியும் பாராட்டுக்களும்.

  இன்று
  பத்துமலை கோவில் நிருவாகத்தினர்கள் துணிவாக எடுத்திருக்கும் முதல் கட்ட நகர்வான சட்ட நடவடிக்கையின்
  முயர்சியை வரவேற்கின்றோம்.

  மலேசிய தமிழர்களின் இனமானத்தையும்,
  திருமுருகன் திருதலத்தையும்,
  அன்னிய சக்திகளின்
  களவாடும் சூழ்ச்சியையும்
  முறியடிப்பு செய்த தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவின் நேர்மையான செயல்
  அறிவுபூர்வமானது,
  ஆகம ஆர்மியின் கூட்டத்தாரின் மூக்கறுந்தது,
  ஆணவ செயல்பாடுகள்
  மண்ணை கவ்வியது,
  நீதிமன்றம் தீர்மானிக்கட்டும், கொக்கரித்த குற்றசாட்டை நீதிமன்றத்தில் முன்வைத்தல்
  வேண்டும் செய்வார்களா?

  நாங்க இனமானங் கொண்ட மறதமிழன்டா,

  வாழ்த்துகள் டான்ஸ்ரீ.

  வெற்றிவேல் முருகனுக்கு,
  வீரவேல் தமிழருக்கு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன