அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > தலைமை நீதிபதியாக மீண்டும் பொறுப்பேற்றார் முஹமட் ரவுஸ்
முதன்மைச் செய்திகள்

தலைமை நீதிபதியாக மீண்டும் பொறுப்பேற்றார் முஹமட் ரவுஸ்

கோலாலம்பூர், ஆக.5 –

தேசிய தலைமை நீதிபதி டான் ஶ்ரீ முஹமட் ரவுஸ் ஷாரீப்பின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற பதவி பிரமாண சடங்கில் ரவுஸ் ஷாரீப்பின் நியமன கடிதத்தை மாட்சிமை தங்கிய மாமன்னர் ஐந்தாவது சுல்தான் முஹமாட் வழங்கினார்.

இந்த பதவி பிரமாண சடங்கில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், பிரதமர்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் டான்ஶ்ரீ சுல்கிப்ளி அஹ்மாட் மக்கினுடின் , மலாயா தலைமை நீதிபதி டான்ச்ர் அஹ்மாட் மாரோப், கூட்டரசு நீதிமன்ற தலைமை பதிவாளர் டத்தோஶ்ரீ லத்தீபா முஹமட் தாஹாரும் கலந்து கொண்டனர்.

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முஹமட் ரவுஸ் நாட்டின் 14ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மார்ச் 31 ஆம் தேதி 66 வயதில் ஓய்வுப் பெற்ற துன் அரீப்பின் சக்காரியாவுக்குப் பதில் முஹமட் ரவுஸ் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நாட்டின் தலைமை நீதிபதிக்கான கட்டாய ஓய்வு வயது 66 ஆகும்.

இதகு முன்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவராகவும் பிப்ரவரி 4 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை செயல்பட்ட முஹமட் ரவுஸ், ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்தார்.

கடந்த மாதம், பிரதமர் அலுவகம் நீதிபதி ரவுஸ் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் சுல்கிப்ளி அஹமட் மகினுடின் ஆகியோரின் பதவிகாலம் முறையே மூன்று மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

அவர்களது நியமனம் பெடரல் அரசமைப்புச் சட்டம் பிரிவு 122(1A) கீழ் செய்யப்பட்டது.

பல தரப்பினர், முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட் மற்றும் முன்னாள் பெடரல் நீதிமன்ற நீதிபதி கோபால் ஶ்ரீராம் உட்பட, இந்த சேவைக்கால நீட்டிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன