நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் சாப்பாடுகளுக்குப் பிறகு, உடனடியாக செய்யும் 7 பழக்கங்கள், நமக்கு அபாயம் விளைவிக்கும் என்று, ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் மருத்துவ ஆய்வின் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் செய்யக் கூடிய கீழ்கண்ட 7 பழக்கங்களை தவிர்த்தால், நலமான வாழ்வுக்கு உத்திரவாதம் என்றும், இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.சாப்பாட்டுக்குப் பிறகு உடனடியாக புகை பிடித்தல் கூடாது.

இவ்வாறு ஒரு சிகரெட் பிடிப்பதுபத்து சிகரெட்டுகளுக்கு ஒப்பானது என்றும் இதனால் புற்று நோய் விளைவதற்கான சாத்தியங்கள் அதிகமிருப்பதாக ஆய்வு உணர்த்துகிறது.உணவுக்குப் பின்னர் உடனடியாக பழங்கள் உண்பது ஆகாது.உடனடியாக பழங்களை உட் கொள்வதால் வயிற்றில் காற்று உப்பிக் கொள்ளுமென்றும் ஆதலால் 1 அல்லது 2 மணி நேரத்திற்குப் பிறகே பழங்கள் சாப்பிட வேண்டுமென்றும் அறிவுறுத்தப்படுகிறது.

இல்லையேல் உணவுக்கு முன்னர் பழங்கள் சாப்பிடலாம் என்றும் ஆலோசனை கூறப்படுகிறது.உணவுக்குப் பிறகு உடனடியாக தேநீர் குடிப்பது ஆகாது. ஏனெனில் தேயிலைகளில் அமிலம் அதிகமிருப்பதால், இந்த அமிலம் நாம் உண்ணுகின்ற உணவிலிருக்கும் புரதச் சத்தை (PROTEIN) கடினமாக்கி விடுமென்றும் இதனால் உணவு செரிமானம் தடைபடுமென்றும் ஆய்வு கூறுகிறது.

உணவு உண்ணும்போது ஆண்கள் சிலுவாருடன் வார்பட்டைடை அணிந்திருந்தால் அதனை தளர்த்திக் கொள்வது கூடாது.வார்ப் பட்டையை தளர்த்திக் கொண்டு உணவு உண்பதால் குடல் முறுக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் செரிமானம் தாமதமாகுமென்றும் ஆய்வு உணர்த்துகிறது.

உணவுக்குப் பின்னர் உடனடியாக குளிப்பது நல்லதல்ல.உடனடிக் குளியல் நமது கை, கால்கள் மற்றும் உடம்பின் இதர பகுதிகளில் இரத்த ஓட்டத்தை மிகைப்படுத்தி, வயிற்றுப் பகுதியின் இரத்த ஓட்டத்தை குறைத்து விடுமென்றும், இதனால் உணவு செரிமானம் பலவீனமடைந்து விடுமென்றும் அறிவுறுத்தப்படுகிறது.

உணவுக்குப் பிறகு அங்குமிங்கும் நடப்பது கூடாது.உணவு உட்கொண்ட பின்னர் நடப்பது நல்ல பழக்கமென்று கூறப்படுவதில் உண்மை இல்லையென்று மறுக்கப்படுகிறது.உணவு அருந்திய பின்னர் உடனடியாக நடப்பதால், நாம் உட்கொண்ட உணவிலுள்ள சத்துக்கள் உடம்பில் சாராமல் போய்விடுமென்று ஆய்வில் தெரிய வருகிறது.

உணவுக்குப் பின்னர் உடனடியாக உறங்கச் செல்வதும் நல்லதல்ல. இதனால் நாம் உட்கொண்ட உணவு முறையாக செரிமானம் ஆகாது.இதுவே குடல் தொடர்பான உபாதைகளுக்கு இடமளிக்குமென்று ஆய்வில்சொல்லப்படுகிறது.

மேற்படி உணவு உண்ணும் போதும் அதற்குப் பின்னரும் நாம் அத்தகைய 7 பழக்கங்களை தவிர்த்துஆரோக்கியத்தை பேணுவதற்கான வழிமுறைக்கு நம்மை மாற்றிக் கொள்வோம். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்