புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அடுத்த தேர்தலில் நஜீப் போட்டியிட முடியாது! சிறையில்தான் இருப்பார் – மகாதீர்
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

அடுத்த தேர்தலில் நஜீப் போட்டியிட முடியாது! சிறையில்தான் இருப்பார் – மகாதீர்

புத்ராஜெயா, ஜூன் 26-

அடுத்த பொதுத் தேர்தலில் நஜீப் போட்டியிட முடியாது. காரணம் அவர் சிறையில் இருப்பார். பல ஊழல் விவகாரங்களுக்கு முக்கிய காரணமாக விளங்கும் நஜீப் அப்போது கண்டிப்பாக சிறையில்தான் இருக்கக்கூடும் என்பதை துன் மகாதீர் இவ்வாறு கூறியுள்ளார்..

1எம்டிபி ஊழல் விசாரணையில் நஜீப் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். அதோடு, மங்கோலிய அழகி அல்தான்துயா கொலை வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இரு விவகாரங்களுக்கும் நஜீப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது யாவரும் அறிந்த ஒன்றாகினும் அதனை நஜீப் இன்னும் மறுத்தே வருகிறார்.

தாம் குற்றமற்றவர் என்று நஜீப் வாதிட்டு வந்தாலும், அவர் இழைத்த குற்றங்களுக்கான தண்டனையை அவர் அனுபவித்துதான் ஆக வேண்டும் என துன் மகாதீர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன