செத்தியு, ஜூன் 28

தனது வீடுகளில் இருந்து 110 கோடி வெள்ளி மதிப்பிலான ரொக்கப் பணமும் விலை மதிப்புள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று அம்னோ தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிடும் கைரி ஜமாலுடின் வையுறுத்தினார்.

இந்த வழக்கு அதிகாரிகளால் இன்னும் விசாரிக்கப்படுகிறது. ஆகவே எந்த தரப்பினரும் இந்த விஷயத்தை கண்டித்தோ, குறைகூறியோ அறிக்கைகள் வெளியிடக்கூடாது என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

நஜீப்புக்கு 100 கோடி வெள்ளி மதிப்பிலான ரொக்கப் பணமும் விலை மதிப்புள்ள பொருட்களும் சொந்தமானவைகளாக இருந்தது உண்மைதான் என்றால் அதற்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும்.

நீதிமன்றத்திலும் குற்றம் சாட்டப்படவேண்டும் என்று கைரி கூறினார். ஆனால் அதற்கு முன்னதாக யாரும் கண்டன அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். அந்த பணத்தின் மதிப்பு என்ன என்பது நமக்கு தெரிகிறது. ஆனால் அது எப்படி வந்தது, யாருக்கு சொந்தமானது என்பது நமக்கு தெரியாது என்று அவர் தெரிவித்தார்.

செத்தியுவில் அம்னோ உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு அவர் நிருபர்களிடம் பேசினார். இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டபின் வழக்கு மீதான விவாதம் நடைபெறும். தீர்ப்பும் வழங்கப்படும். அதன்பிறகே அம்னோ தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும். ஆகவே இப்போதைக்கு போலீசார் புலன்விசாரணையை பூர்த்தி செய்யட்டும்.

அம்னோ யாரையும் பாதுகாக்காது என்று கைரி திட்டவட்டமாகக் கூறினார்.