”டாஸ்க்” என்ற பெயரில் கலாச்சார சீரழிவு – பிக்பாஸ்

0
12

பிக்பாஸ் என்பது இன்று ஒவ்வொரு வீட்டின்  ஜன்னாலி உள்ளது.  அந்த ஜன்னலைத் திறக்க சிறு வயது பிள்ளைகள் முதல்  பெரியோர்கள்வரை,  இரவானால் காத்திருக்கின்றனர், அதோடு  அத்தனை  பேரும் ஆர்வம் கொண்டுள்ளனார்.

முடிந்தவரை இதன் மூலம் நல்லதைக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து விலகி, இன்று விஜய் டீவி  கலாச்சார சீரழிவுக்கு பாதை வகுத்து வருகிறது.

இதில், இன்றைய பகுதியில்,  ஒரு டாஸ்க்கில் முதலாளிகளை மகிச்சிப்படுத்த வேலைக்காரப் பெண்கள் ஆடல் பாடலுடன் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பது போட்டி. ஆனால், இதில் நடனம் என்ற பெயரில் மிக மோசமான உணர்ச்சிகளுடன் அங்கு சில பெண்கள் ஆடியது நாகரிகமற்ற முறையில் இருந்தது.

அதனை,  முதலாளிகள் என்ற பெயரில் பார்த்து கைத்தட்டி, ரசித்து, விசில் அடிக்கிறார்கள் பிக்பாஸ் வீட்டு ஆண்கள்.  இதனைக் குடும்பத்தோடு காண முடியுமா என்ற கேள்வியுடன் முகம் சுழிக்க வைக்கிறது அந்த காட்சிகள். தமிழ்ப்பெண்கள் என்று அடிக்கடி சொல்லும் போட்டியாளர்கள், தங்களின் உடைகளில் அதில் அதனைக் காண்பிப்பதில்லை.

”மைக்கை மாட்டுங்கள்”,  ”டாஸ்கை முடியுங்கள்” , “பகலில் தூங்காதீர்கள் என்று  இப்படி வீட்டுள்குள் எத்தனையோ விதிகளை கூறும் பிக்பாஸ்க்கு  ‘அறைகுரை ஆடையுடன் திரியாதீர்கள் என்று சொல்ல மட்டும் ஏன் வாய்வரவில்லை என்று தெரியவில்லை.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகம் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.  இதனை சினிமாவும் எடுத்துக் காட்டுகிறது.  ஆனால்,  பெண்களின் அதிகபட்ச அங்க அசைவுகள் இந்நிகழ்ச்சியில் காமிராக்கள்  காட்டி பெண்கள் மீதான பார்வையை அசிங்கப்படுத்துகின்றன.