பிக்பாஸ் வீட்டில் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிகொள்ளும் நிலை அதிகமாகி வருகிறது.  இதன் வழி அவர்களின் குணமும் தென்படுகிறது. சிலர் நடிக்கின்றனர் இன்னும் சிலர் அதை மறைக்கின்றனர். அதுவே இப்போது கூர்ந்து கவனிக்கிப்படுகிறது.  மக்களின் இந்த கழுகுப் பார்வையில் வில்லியாக சிக்கியுள்ளவர்கள் யார்?

மும்தாஜ் – முதலில் அனைவருக்கும் பிடித்தவராக இருந்தார். பின்னர் நித்தியா விசயத்தில் கொஞ்சம் வில்லியாகவும் மாறினார். பிடிக்காமல் இருந்தாலும் சமாளித்துக்கொண்டு சில இடங்களில் இருந்தார். தற்போது,  பிடிக்காததை முகத்துக்கு நேராகவே சொல்லும் நிலைக்கு வந்துள்ளார்.  மமதி இல்லை என்றால் அங்கு அவருக்கு தூண் இல்லாமல் போகும்.

மமதி –  அம்மாவுக்கு சின்னமா போல்…. மும்தாஜ்-க்கு சின்னமாகவே மாறியிருக்கும் தோழி. இவர் நேரடியாக யாரையும் தாக்கவில்லை என்றாலும்,  நியாயம் பேசுகிறோம் என்ற பேரில் இழுவையாக பேசிவதே இவர் மீது  போலியான ஒரு சந்தேகம் வருகிறது. இதை உணர்ந்த சில போட்டியாளர்களே ஒரு நாள் முழுவதும் இவர் பேச வேண்டாம் என்று தண்டனையும் கொடுத்துள்ளனர்.

நித்தியா –  தன் குணம் என்னவென்பதை அங்கு முதலில் போட்டுடைத்தவர் இவர்தான் .  கணவர் மேல் இருந்த வெறுப்பை நடிக்காமல் சில இடங்களில் காண்பித்தார்.  வெங்காயத்தில் பிரதிபலித்த பிடிவாதத்தை அனைவரும் தவறு என்று கூற அதனையும் ஒப்புக்கொண்டு, சில இடங்களில் பாந்தமாக நடந்துக்கொண்டார்.  நித்தியாவின் நிலையைப்  புரிந்துக்கொண்டு கமலும் சில இடங்களில் நித்யாவுக்கு பேசுவதை காண முடிந்தது.  இருந்தும் சில பொழுதுகள் அவரின் சிடு சிடு குணத்தை பாலாஜியிடம் அவரால் மறைக்க முடிவதில்லை.  தலைவியான பின்  முடிந்தவரை அனைவரோடும் பேசுகிறார்.

வைஷ்ணவி –  இவரும்  எல்லா  இடத்திலும் நியாயம் பேசி வன்மத்தை வளர்த்துக்கொள்கிறார்.  சில இடங்களில் இவர் புரணி பேசுவது ஆண்களுக்கு பிடிக்காத நிலையை உருவாக்கி உள்ளது.  வரும் நாட்களில் இவர் மீதான கோபம் பல  இடங்களில் வெடிக்கும் என்று புரோமோ கூறுகிறது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் அந்த  முதல் நபர் யார் ? — தொடரும்