முகப்பு > அரசியல் > பல்வேறு தொந்தரவுகளை கொடுத்த ஸாஹிட்டோடு ஒத்துழைப்பு இல்லை – துன் மகாதீர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

பல்வேறு தொந்தரவுகளை கொடுத்த ஸாஹிட்டோடு ஒத்துழைப்பு இல்லை – துன் மகாதீர்

லங்காவி, ஜூலை 1-

அம்னோவின் தலைவராக வெற்றி பெற்ற டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடிக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் வேளையில், அக்கட்சியோடு ஒத்துழைப்பு தரப்படாது என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் குறிப்பிட்டுள்ளார்.

அம்னோவினர் அவரை விரும்புகின்றனர். அதனால்தான் அவருக்குப் பாராட்டுகள். எனினும், அவரோடு ஒத்துழைப்பு கிடையாது. எங்களுக்கு பல்வேறு தொந்தரவுகளை அவர்கள் கொடுத்துள்ளார்கள். நன்கொடைகளை வசூலிக்கத் தடை விதித்தார்கள். அவர்களின் அச்சுறுத்தலால், எனது நண்பர்கள் என்னை விட்டும் நாட்டை விட்டும் வெளியேறினர் என டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.

லங்காவியின் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் மகாதீர், அதற்கு முன்னதாக ஜாலான் மகாவங்சாவில் உள்ள தமது சேவை மையத்திற்கு வருகையளித்தார். அந்த நான்கு மாடிக் கட்டடம் தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இம்மாத இறுதிக்குள் அது தயாராகிவிடும் எனச் சொல்லப்படுகிறது.

அந்நிகழ்ச்சியில் அவரது துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா அலி மற்றும் ஆயர் ஹங்காட் சட்டமன்ற உறுப்பினர் ஜுஹாரி புலாட் ஆகியோர் கலந்து கொண்டனர். நெகிரி செம்பிலானின் முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் அம்னோவின் துணைத் தலைவராகவும் உதவித் தலைவர்களாக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் டத்தோஸ்ரீ மாட்ஸிர் காலிட் ஆகியோர் தேர்வு பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன