வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > அமைச்சரானார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

அமைச்சரானார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

கோலாலம்பூர், ஜூலை 2-

பி.கே.ஆரைச் சேர்ந்த டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இன்று நீர், நிலம், இயற்கை வளங்கள் துறையின் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

அவருடன் சேர்த்து மொத்தம் 13 பேர் மாமன்னர் சுல்தான் முகமட் V முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சைட் சாடிக், பிரதமர்துறை சமய பிரிவில் முகமட் முஜாஹிட், உள்நாட்டு வாணிபம், பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சராக டத்தோ சைபுடின் அப்துல்லா, பொதுப்பணித்துறை அமைச்சராக பாரு பியான், லியூ வுய் கியோங் பிரதமர்துறையில் சட்டப்பிரிவு அமைச்சராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

டாரெல் லெய்கிங் அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் முகமட் டின் கெத்தாப்பி சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராகவும் திரேசா கோக் முதன்மை தொழில்துறை அமைச்சராகவும் யியோ பீ யின் எரிவாயு, தொழில்நுட்பம், அறிவியல், கால நிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் காலீட் சாமாட் பிரதேச அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன