அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ஊழல் தடுப்பு ஆணையத்தில் ஸாஹிட் ஹமிடி வாக்குமூலம்
முதன்மைச் செய்திகள்

ஊழல் தடுப்பு ஆணையத்தில் ஸாஹிட் ஹமிடி வாக்குமூலம்

புத்ரா ஜெயா, ஜூலை 2
அறவாரியம் ஒன்றின் நிதியை தவறாக பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில் அம்னோவின் புதிய தலைவரான டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி இன்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.

எம்ஏசிசியின் உத்தரவின் பேரில் இன்று காலை 9.30 மணிக்கு அதன் தலைமையகத்திற்கு வந்திருந்தார்.

கருப்பு நிற தோயோத்தா வெல்ஃபையர் வாகனத்தில் வந்திறங்கினார்.

பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தமது குடும்பத்தினர் நடத்திவரும் அறவாரியம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க அவர் வந்திருந்தார்.

இந்த விசாரணை தொடர்பான செய்திகளைச் சேகரிக்க காலை 6.30 மணி தொடங்கி உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் ஊழல் தடுப்பு ஆணைய வளாகத்தில் குவியத் தொடங்கினர்.

2009ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்திற்கு இணங்க, அவர் வாக்குமூலம் அளிக்க ஜூன் 27ஆம் தேதி ஆணையம் அவருக்கு உத்தரவிட்டிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன