அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > எனக்கு எந்த ஒரு பதவியும் வேண்டாம் – கைரி ஜமாலுடின்!
முதன்மைச் செய்திகள்

எனக்கு எந்த ஒரு பதவியும் வேண்டாம் – கைரி ஜமாலுடின்!

புத்ராஜெயா, ஜூலை.3 –

நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் எந்த ஒரு பதவியிலும் தம்மை இணைத்துக் கொள்ள விரும்பவில்லை என ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். ஜூலை 16 ஆம் தேதி தொடங்கவுள்ள மக்களவைக் கூட்டத்தில் தாம் நிச்சயம் கலந்து கொள்ளவிருப்பதாக குறிப்பிட்ட கைரி தற்போது தமக்கு ஓய்வு தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவி குறித்து எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் இன்னமும் கூட்டத்தை நடத்தவில்லை என கைரி கூறினார்.எதிர்கட்சி தலைவர் பதவிக்கு நீங்கள் தகுதியானவர் என நினைக்கிறீர்களா என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி கைரி , ஆம் என்று பதில் அளித்தார். ஆனால் எனக்கு இப்போது தேவை ஓய்வு என்றும் அவர் கூறினார்.

நான் சுதந்திரமாக குரல் கொடுக்க விரும்புகிறேன். அதேவேளையில் எனது கட்சியின் நடவடிக்கைகளும் சீராக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பதவியை ஏற்று கொண்டால், நாம் அந்த பதவியுடன் பிணைக்கப்படுவோம். நம்மால் இதர பணிகளை சுதந்திரமாக செய்ய முடியாது என்றும் கைரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் கைரி ஜமாலுடின் எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஸ்ராப் வாஜ்டி டுசுக்கி உட்பட பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். எனினும் கைரியின் நிலைக் குறித்து அம்னோ கட்சியின் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன