சிலாங்கூர் தண்ணீர் பிரச்னைக்கு 1 மாதத்தில் தீர்வுக் காணப்படும்! சேவியர் ஜெயக்குமார் உறுதி

புத்ராஜெயா, ஜூலை 3-

நீண்ட காலமாக இருந்து வரும் சிலாங்கூர் தண்ணீர் பிரச்னைக்கு ஒரு மாதத்தில் தீர்வுக் காணப்படும் என்று நீர், நில மற்றும் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் உறுதியளித்தார்.

இவ்விவகாரம் குறித்து மந்திரி புசார், அமிருடின் ஷாரி உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விட்டது. எனினும், இதுவரை சில விவகாரங்களுக்குத்தான் ஒப்புதல் அளிக்கப்பட்டதால் அவை குறுகிய காலத்தில் தீர்க்கப்பட்டு விடும் என்று நம்பப்படுகிறது.

இதில் நான் கால அவகாசத்தை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கும்படி அமைச்சரவையில் கேட்டுக் கொள்வேன் என்று அமைச்சராக நியமிக்கப்பட்டுப் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கோலா லாங்காட் தொகுதி எம்.பி.யுமான சேவியர் குறிப்பிட்டார்.