திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ஜமாலை கொண்டு வர நடவடிக்கை துரிதப்படுத்தப்படும்! டான்ஸ்ரீ ஃபுஸி ஹருண்
முதன்மைச் செய்திகள்

ஜமாலை கொண்டு வர நடவடிக்கை துரிதப்படுத்தப்படும்! டான்ஸ்ரீ ஃபுஸி ஹருண்

ஷா ஆலம், ஜூலை 3 

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட சுங்கை பெசார் தொகுதி அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட் யூசோப்பை நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தலைவர் டான்ஸ்ரீ ஃபுஸி ஹருண் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் தாங்கள் இந்தோனேசிய போலீஸ் துறையோடு தொடர்பு கொண்டு அது பற்றி விசாரித்துள்ளதாகவும், அந்நாட்டின் சட்ட திட்டத்திற்கு இணங்கவே ஜமால் அங்கிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படுவார் என பதிலளிக்கப்பட்டதாக ஃபுஸி ஹருண் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட ஜமால், தற்போது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் நலமாக இருப்பதாக அந்நாட்டு போலீஸ் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நமது நாட்டு போலீஸார் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பர் என்றும்  அதற்காக ஒரு போலீஸ் குழு அங்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

தலைநகர் அம்பாங் புத்ரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜமால், மே 25ஆம் திகதி, அங்கிருந்து தப்பி ஓடினார்.

கடந்தான்டு அக்டோபர் 5ஆம் திகதி, ஜமால் ஷா ஆலமில் உள்ள அரசுத் தலைமைச் செயலகத்தின் முன்பு பீர் போத்தல்களை சுத்தியலைக் கொண்டு உடைத்து பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. மேலும் 1960ஆம் ஆண்டு ஆயுதச் சட்டம் பிரிவு 34இன் கீழ் அவர் மீது பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன