புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > பயணப் பாதுகாப்புக் கொள்கையை இணைப்பீர்!  குலசேகரன் பரிந்துரை
முதன்மைச் செய்திகள்

பயணப் பாதுகாப்புக் கொள்கையை இணைப்பீர்!  குலசேகரன் பரிந்துரை

கோலாலம்பூர், ஜூலை 3

ஒவ்வொரு வேலை செய்யும் இடத்திலும் உள்ள தொழிலாளர் பாதுகாப்புக் கொள்கையில் பயணப் பாதுகாப்புக் கொள்கையையும் முதலாளிமார்கள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மனித வள அமைச்சர், எம்.குலசேகரன் பரிந்துரைத்தார்.

தொழிலாளர்கள் பாதுகாப்பு விவகாரத்தை அரசு மிகவும் கடுமையான ஒன்றாக கருதுவதால் பயண விபத்துகளைத் தடுக்கும் முயற்சிகளை அதிகரிக்கும்படி சம்பந்தப்பட்டத் தரப்பினரை அரசு கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விபத்துகளின் விளைவு அனைத்துத் தரப்பினருக்கும் பெரிய ஒன்றாகத்தான் இருக்கிறது. இதில் 2017ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால் மரண விபத்துகள், உடல் உறுப்பு செயலிழப்பு, காயங்களுக்காக சொக்சோ செய்த செலவு வெ.80 கோடி வரை ஆகும். இருந்த போதிலும் விபத்துகளில் தங்களின் குடும்ப உறுப்பினர், சமூகத்தினர், உடன் வேலை செய்பவர் போன்றவர்களை இழந்து விட்டால் அதை ஒரு போதும் பணத்தால் ஈடுகட்ட முடியாது என இவ்வாண்டுக்கான வேலை இடத்திற்குப் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்ளும் விழிப்புணர்வு முகாமைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது குலசேகரன் குறிப்பிட்டார்.

இதனிடையே, கடந்தாண்டில் நிகழ்ந்த பயணிக்கும் போது ஏற்பட்ட 33,319 விபத்துகளில் 667 தொழிலாளர்கள் மரணமுற்றனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 மரணச் சம்பவங்கள் இவ்விபத்துகளில் ஏற்படுகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன