வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் மீது ஹாடி வழக்கு
முதன்மைச் செய்திகள்

சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் மீது ஹாடி வழக்கு

கோலாலம்பூர்,  ஆக. 6-  

சரவாக் ரிப்போர்ட் பத்திரிகையின் ஆசிரியர் மீது பாஸ் கட்சியின் தலைவர் அவதூறு வழக்கை லண்டன் உயர்நீதி மன்றத்தில்  தொடுத்துள்ளார். தமக்கு எதிராக அவதூறான, பொய்யான செய்திளை வெளியிட்ட அப்பத்திரிகையின் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுன் மீது பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் இவ்வழக்கை லண்டன் சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் என அவரின் வழக்கறிஞர் நிறுவனமான கார்டர் ருக்கின் வழக்கறிஞர் ஜேக்கப் டீன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஹாடி பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடம் வெ. 9 கோடியைப் பெற்றதாக அப்பத்திரிகை  2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செய்தி வெளியிட்டதற்கு எதிராக அந்த வழக்கு தொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இது சம்பந்தமாக ஹாடியின் அரசியல் செயலாளர் அகமட் சம்சுரி மொக்தார், அந்த வழக்கின் மேலாண்மை  நடவடிக்கையில் ஹாடியின் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டிருப்பதாகவும், அந்த வழக்கில் ஹாடி தோற்றால் ரியூகாசல் செலுத்தவேண்டிய வழக்கறிஞர் கட்டணத்தை ஹாடி செலுத்த வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க அந்த விசாரணை நடந்ததாகவும், அதில் வழக்கின் பதிவுக் கட்டணமாக வெ. 80,000ஐ தாம் செலுத்துவதாக ஹாடி ஒப்புக் கொண்டதாக அகமட் சம்சுரி தெரிவித்தார்.

ரியூகாசல் தமது வாதத்தில் தாம் ஹாடிக்கு எதிராக மலேசியாவில் வழக்கு தொடுக்க முடியாது என்றும் தற்போதைய பிரதமர் தமது வாய்ப்புகளைத் தடுப்பார் என்றும் குறிப்பிட்டதற்கு மலேசியாவும் பிரிட்டனும் வழக்கு சம்பந்தமாக சிறந்த நல்லுறவை வைத்திருப்பதாகவும் ரியூகாசலின் தமது வழக்குச் செலவினை மலேசிய நீதிமன்றங்களில் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருப்பதால், அவரின்   காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அந்த வழக்கின் செலவுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கான வெ. 83,700ஐ அவர் ஹாடியிடம் அவர் செலுத்த வேண்டுமென்று  நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றம் பின்னர் அறிவிக்கும் முழுத் தொகையை அவர் செலுத்த வேண்டுமென்று உத்தரவிட்டதோடு ரியூகாசல் இந்த வழக்கின் தமது வாதத்தை 21 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.  தீர்ப்பின் முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்து ரியூகாசலின் விண்ணப்பம் நீதிமன்றத்தால்  ரத்து செய்யப்பட்டது. மலேசிய அரசின் மீது ரியூகாசல் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதால், இந்த வழக்கை பின்தொடர அங்குள்ள மலேசிய தூதரகம் தனது பிரதிநிதிகளை அனுப்பியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது, 2016 ஆகஸ்டில் ஹாடிக்கு எதிராக வெளியிடப்பட்ட செய்திக்காக மேற்கண்ட வழக்கு ஏப்ரல் 21இல் தாக்கல் செய்யப்பட்டது. அந்தச் செய்தியில் பிரதமருடன் இணக்கப் போக்கோடு நடந்து கொள்ள ஹாடி அவரிடமிருந்து வெ. 9 கோடியைப் பெற்றுக் கொண்டதாகச் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன