ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > 2018 உலகக் கிண்ணம் : 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் காலிறுதியில் இங்கிலாந்து !
விளையாட்டு

2018 உலகக் கிண்ணம் : 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் காலிறுதியில் இங்கிலாந்து !

மாஸ்கோ, ஜூலை. 4 –

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து தகுதிப் பெற்றுள்ளது. ஆக கடைசியாக 2006ஆம் ஆண்டில் காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய இங்கிலாந்து தற்போது மீண்டும் காலிறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்கிழமை நடந்த கடைசி அரை காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து 4 – 3 என்ற பெனால்டி கோல்களில் கொலம்பியா அணியை வீழ்த்தியது. முன்னதாக 90 நிமிட ஆட்டமும், கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களிலும் ஆட்டம் 1- 1 என்ற கோல்களில் முடிவடைந்தது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.  இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 57வது நிமிடத்திக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து பயன்படுத்தி கொண்டது. அந்த அணியின் ஹாரி கேன் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் முடிவில் 93வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் முறை தரப்பட்டது.

இதில் முதல் வாய்ப்பில் கொலம்பியாவும், இங்கிலாந்தும் ஒரு கோல் அடித்தன. இரண்டாவது வாய்ப்பிலும் இரு அணிகளும் ஒரு கோல் அடித்தன. மூன்றாவது வாய்ப்பில் கொலம்பியா அணி ஒரு கோல் அடிக்க 3-2 என முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியின் வாய்ப்பு தடுக்கப்பட்டது. நான்காவதில் கொலம்பியா வாய்ப்பு தடுக்கப்பட்டது. இங்கிலாந்து ஒரு கோல் அடித்து 3-3 என சமநிலை ஆனது.

இறுதியாக, கடைசி வாய்ப்பில் கொலம்பியா கோல் அடிக்கவில்லை. இங்கிலாந்து அணி கோல் அடித்து 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன