முகப்பு > முதன்மைச் செய்திகள் > குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணையைக் கோரினார் நஜிப் !
முதன்மைச் செய்திகள்

குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணையைக் கோரினார் நஜிப் !

கோலாலம்பூர், ஜுலை.4

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை தம் மீது கொண்டு வரப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணைக் கோரியுள்ளார். அந்த குற்றச்சாட்டுகள் வாசிக்கப்படும்போது அதனை புரிந்து கொண்டதாக நஜிப் தலையசைத்தார். பின்னர் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 10 லட்சம் ரிங்கிட் ஜாமின் தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும் என அரசாங்க தரப்பு வழக்கறிஞர் குழுவுக்கு தலைமையேற்றுள்ள தேசிய சட்டத்துறை தலைவர் தோமி தாமஸ் நீதிபதியைக் கேட்டு கொண்டார்.

எனினும் நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் 40 லட்சம் ரிங்கிட் ஜாமின் தொகை என்பது அதிக பட்சமானது என நஜிப்பின் வழக்கறிஞர் டான் ஶ்ரீ முஹமட் ஷாபி அப்துல்லா வாதாடினார். இந்த தொகையைக் கட்டுவதற்கு தமது கட்சிக்காரரும் அவரின் மனைவி, பிள்ளைகள் தங்களின் உறவினர்களிடம் இருந்த இந்த தொகையைப் பெற வேண்டும். அவர்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் தற்போது 40 லட்சம் ரிங்கிட் என்பது அதிகம் என அவர் வாதடினார்.

இரண்டு நபர்களின் உத்தரவாதத்தின் பெயரில் 5 லட்சம் ரிங்கிட் முதல் எட்டு லட்சம் ரிங்கிட் வரையில் ஜாமின் தொகை முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் நீதிபதியைக் கேட்டு கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன