கோலாலம்பூர், ஜூலை 6
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் எதிர்வரும் ஜூலை 10ஆம் தேதி 93 வயது பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு போஸ் மலேசியா பெர்ஹட் சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிடுகிறது.

இந்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடுவது மூலம் நாட்டின் மும்மாதிரி தலைவரான துன் மகாதீருக்கு போஸ் மலேசியா மரியாதை செலுத்துகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி அல் இஷாக் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் வளர்ச்சிக்காக நிறைய தியாகங்கள் செய்திருக்கின்றார் துன் மகாதீர். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் தனது மனைவி துன் டாக்டர் சித்தி அஸ்மாவுடன் இருக்கும் காட்சியும், பிரதமராக அவர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்ட காட்சியும் இந்தச் சிறப்பு தபால் தலைகளில் இடம் பெறும்.

இந்தத் தபால் தலைகள் வெ.0.60 காசுக்கு விற்கப்படும். அதே வேளையில் 1 செட் நினைவு தபால் தலை வெ.93க்கு விற்கப்படும்.