அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > எஞ்சிய ஜாமின் தொகையை செலுத்தினார் நஜிப் !
முதன்மைச் செய்திகள்

எஞ்சிய ஜாமின் தொகையை செலுத்தினார் நஜிப் !

கோலாலம்பூர், ஜூலை. 9 –

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் , திங்கட்கிழமை காலை ஜாலான் டூத்தாவில் உள்ள கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தமது எஞ்சிய ஜாமின் தொகையை செலுத்தினார். காலை 11.43 மணி அளவில் , நஜிப் அவரின் மனை வி டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோரோடு, கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தார்.

நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த 80-க்கும் மேற்பட்ட நஜிப்பின் ஆதரவாளர்கள் “”நஜிப்பை விடுதலை செய்யுங்கள்””, “”நஜிப் வாழ்க “” என  முழக்கமிட்டனர்.  நஜிப்பின் எஞ்சிய ஜாமின் தொகையை செலுத்துவதற்காக தொடங்கப்பட்ட நிதியை,  அதன் தலைவர் டத்தோ முஹமட் ரஸ்லான் முஹமட் ரஃபி,  முன்னாள் பிரதமரிடம் ஒப்படைத்தார்.

ஜாமின் தொகையை செலுத்துவதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்தப் பின்னர் நஜிப்பும் அவரின் துணைவியாரும் டோயாட்டா வெல்பைர் வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டனர். கடந்த புதன்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தமக்கு எதிரான 4 குற்றச்சாட்டுகளை மறுத்து நஜிப் விசாரணைக் கோரினார் என்பது குறிப்பிடதக்கது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன