லஞ்ச ஊழலை முறியடிக்க வழிமுறை -துன் டாக்டர் மகாதீர்

0
4

புத்ராஜெயா, ஜூலை 10
நாட்டில் லஞ்ச ஊழலைக் குறைப்பதோடு அதனை முறியடிப்பதற்கும் மிகச் சிறந்த வழிமுறையை அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைத்ததிலிருந்து லஞ்ச ஊழலை முறியடிக்க ஜிஏஐசிசி எனப்படும் தேசிய ஆட்சி முறை லஞ்ச ஊழல் எதிர்ப்பு மையத்தை அமைத்து, எம்ஏசிசியை வலுப்படுத்துவதோடு சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறது என்று இன்று எம்ஏசிசி தலைமையகத்தில் நடைபெற்ற ஜிஐஏசிசியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது முதல் நடவடிக்கையல்ல. இந்நாட்டில் லஞ்ச ஊழலை ஒழிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். லஞ்ச ஊழலை ஒழிப்பதில் குறிப்பிட்ட இலக்கை அடைந்துவிட முடியும் என பக்காத்தானின் தலைவருமான அவர் நம்பிக்கை தெரிவித்தார்.