ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தாபோங் ஹராப்பானுக்கு வெ. 50 ஆயிரம் நிதி:எஸ்பிகேஎர் குழுமம் வழங்கியது
சமூகம்முதன்மைச் செய்திகள்

தாபோங் ஹராப்பானுக்கு வெ. 50 ஆயிரம் நிதி:எஸ்பிகேஎர் குழுமம் வழங்கியது

உலுசிலாங்கூர்,ஜூலை 10
நாட்டின் பெருங்கடனை அடைக்க அனைவரும் முன்வர வேண்டும். இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக எஸ்பிகேர் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சத்தியபிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.

உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியாவ் நடத்திய நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் எஸ்பிகேஎர் குழுமம் தாபோங் ஹராப்பான்னுக்கு 50 ஆயிரம் வெள்ளி நிதி வழங்கினர். எஸ்பிகேர் குழுமத்தின் இந்த நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது.

நாட்டில் இருக்கின்ற அனைத்து நிறுவனங்களும் இதை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டால் நம் நாடு கொண்டிருக்கும் கடன் குறையக்கூடும் என்று ஜூன் லியாவ் தெரிவித்தார்.

 

 

பக்காத்தான் ஹராப்பான் மீது மக்கள் கொண்டிருக்கும் அன்பையும் அக்கறையும் இந்நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறது. இது தொடர வேண்டும். உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த நிதியை தம்மிடம் வழங்கியதற்காக நன்றி பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எஸ்பிகேர் குழுமம் எல்லா நிலையிலும் மக்களின் காவலனாக செயல்படும் ஒரு தனியார் கிளினிக்காக இயங்கி வருகிறது. இந்தக் குழுமத்திற்கு சொந்தமாக 8 கிளினிக்குள் இருக்கின்றன. அதில் 27 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். அனைவரின் சார்பாகவும் இந்த நிதி வழங்கப்படுகிறது என்பதை டாக்டர் சத்திய பிரகாஷ் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் பல்வேறு சமூகநல நடவடிக்கைகளை எஸ்பிகேர் குழுமம் நிகழ்த்தி வருகிறது. அதில் இந்த நிதி வழங்கியதும் ஓர் அங்கம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன