வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > 2ஆவது மாடியிலிருந்து எறியப்பட்ட குழந்தை உயிரிழந்தது!
முதன்மைச் செய்திகள்

2ஆவது மாடியிலிருந்து எறியப்பட்ட குழந்தை உயிரிழந்தது!

கோலாலம்பூர், ஜூலை 10-
மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட கைக்குழந்தை இரண்டு வார போராட்டத்திற்குப் பிறகு கடந்த சனிக்கிழமை பரிதாபமாக உயிரழந்தது.

கடந்த ஜூன் 24-ஆம் தேதி காஜாங் பேருந்து நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள கட்டடத்தின் 2ஆவது மாடியிலிருந்து அந்தக் குழந்தை தூக்கி வீசப்பட்டது. காஜாங் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தை சிகிச்சை ஏதும் பலனளிக்காததால் உயிரிழந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் சாபிர் முகமட் யூசோப் தெரிவித்தார்..

அந்தக் குழந்தை தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் உயிரிழந்ததாக மருத்துவர் உறுதிப்படுத்தினார்.

இதனிடையே, அந்தக் குழந்தையின் தாயான இந்தோனிசிய பெண்மணியின் மீது குற்றவியல் சட்டப் பிரிவு 302 மற்றும் 317-இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால், அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட மறுநாளே அந்தக் குழந்தை இறந்து விட்டதால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை திருத்தம் செய்ய அரசு தரப்பு துணை வழக்கறிஞரை அணுகவுள்ளதாக இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அகமட் சாபிர் தெரிவித்தார்.

சம்பவ நிகழ்ந்த இடத்திற்கு அருகே இருந்த உணவகத்தின் உரிமையாளர் அந்தக் குழந்தை உயிரோடு இருப்பதை கண்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளார்.

சுமார் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன