பொன்னம்பலத்தின் ஒரு நாள் சிறைவாசத்திற்கு பிறகு பிக்பாஸ் வீட்டின் பிரச்சனைகள் தொடர்ந்து எக்கசக்கமாகி வருகின்றன. அனைத்து பிரச்சனைகளும் குறிப்பாக யாஷிகாவை சுற்றியே பிண்ணியிருக்கின்றன.

மஹத் யாஷிகாவை நாமினேட் செய்ததில் இருந்து, யாஷிக்காவும் மஹத்துக்கும் தொடரும் சின்ன சின்ன சண்டைகள் டாஸ்க்கை சரியாக செய்ய முடியாத அளவுக்கு பெரிய மோதலில் போய் முடிகிறது.

திருடன் போலீஸ் டாஸ்கில், யாஷிகா மஹத்துடன் சரியாக முகம் கொடுக்காத்தை பார்த்து கடுப்பாகிய அவர், இதற்கு தான் நாமினேட் செய்ததால்தான் யாஷிகா இவ்வாறு நடந்துகொள்வதாக உள்ளே சிலரிடம் கூறுகிறார். தன்னை பற்றி யார் என்ன சொன்னாலும் எகிறிக்கொண்டு வரும் மஹத், யாஷிகாவின்  விசயத்தில் மட்டும் பொட்டிப் பாம்பாய் அடங்கி போகிறார்.

இதனிடையே, இந்த வார சனிக்கிழமை வைஷணவிக்கு கமல் நிச்சயம் குறும்படம் காட்டுவார். காரணம் தாம் யாரைப் பற்றியும் புறம் பேசுவதில்லை என்று கூறிய அவர் பொன்னம்பலத்தை பல இடங்களில் புறம்பேசி பல கதைகள் சொல்லி அங்கு ஒரு பூகம்பத்தையும் கிளப்பி இருக்கிறார்.

பெண்களைத் தூக்கும் விசயத்தில் அவர் தமாஷாக பேசியதை, யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று கூறி செல்லமாக கடிந்துக்கொண்ட வைஷ்ணவி, மறூநாள் காலையிலேயே அதனை ஜனனி, டேனி, மஹத் மற்றும் ரம்யாவிடமும் கூறி ஊதி பெரிதாக்கி உள்ளார்.

வைஷ்ணவி செய்வது தவறு என்று சென்ராயன், பாலாஜி நித்தியாவுடம் கூற, பின்னர் பாலாஜி அதனை பொன்னம்பலத்திடம் கேட்க, அங்கிருந்து பொன்னம்பலம் இது ஒரு தவறே இல்லை என்று தன்னிலை விளக்கம் அளிக்கிறார். பொன்னம்பலம் சினிமாவில் மட்டுமல்ல பிக்பாஸ் வீட்டிலும் இவர்களுக்கு வில்லனாகதான் தெரிகிறார் போல.

இவ்வளவும் செய்த வைஷ்ணவி, திரும்பவும் பொன்னம்பலத்திடமே சென்று, அந்த சம்பவத்தை நான் யாரிடமும் கூறவில்லை என்று சொல்லும்போது, ரசிகர்களே வாய் பிளக்க நேர்கிறது. வைஷ்ணவி புறம் பேசுகிறார், என்று அவரை திரும்ப திரும்ப குறை சொன்ன டேனியும் மஹத்தும் இப்போது பொன்னம்பலம் விசயத்தில் சேர்ந்து கொண்டு பேசுவது முகம் சுளிக்க வைத்துள்ளது.

அநேகனின் கணிப்பு சரியென்றால், இந்த வாரம் யாஷிகா வெளியேற்றப்படுவார்; அடுத்த வாரம் மஹத் நாமினெட் செய்யப்படுவார்..!