கோலாலம்பூர், ஜூலை 13
பொருட்களின் விலை உயர்வுக்கு ஜிஎஸ்டி முக்கிய காரணம் இல்லை என பக்காத்தான் ஹராப்பான் அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வெளியிட்டுள்ள தகவல் தமக்கு அதிர்ச்சியை அறிப்பதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் தேசிய முன்னணி அரசாங்கத்தை இந்தக் குற்றச்சாட்டை வைத்துதான் குறை கூறி வந்தனர். எங்கள் தரப்பிலிருந்து சரியான பதில் எதுவும் கிடைக்காததால் கேலியாகவும் பேசினர். ஆனால், தற்போது பக்காத்தான் ஹராப்பான் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என இன்று தனது முகநூலில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் நஜீப் தெரிவித்தார்.

ஜிஎஸ்டியை சுழியத்திற்கு கொண்டு வந்த போதிலும் பொருட்களின் விலை குறையவில்லை. வரும் செப்டம்பரில் எஸ்எஸ்டி அறிமுகப்படுத்தியப் பின்னர் பொருட்களின் விலை மேலும் உயரும் என்பது கவலையளிப்பதாக நஜீப் குறிப்பிட்டார்.

விருப்பப்படி வரி திட்டத்தை மாற்றுவதால் இந்த விலை உயர்வு ஏற்படும். மக்களின் வாழ்க்கை செலவீனம் குறைக்கப்படும் என்று பக்காத்தான் ஹராப்பான் அளித்த தேர்தல் கொள்கைக்கு எதிராக இது அமைகிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

எனவே, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் இதற்கு நல்ல முடிவை கையாள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
.