வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > 20ஆவது மாடியிலிருந்து விழுந்த பெண் மரணம்; கொலையா? தற்கொலையா?
முதன்மைச் செய்திகள்

20ஆவது மாடியிலிருந்து விழுந்த பெண் மரணம்; கொலையா? தற்கொலையா?

கோத்தா டாமான்சாரா, ஜூலை 13
இங்குள்ள ஆடம்பர அடக்குமாடி குடியிருப்பில் ஜப்பான் பெண் (வயது 62) 20 ஆவது மாடியிலிருந்து விழுந்து மரணமடைந்தார்.

நேற்றிரவு இரவு 7.27 மணியளவில் அப்பெண்ணின் உடல் அந்தக் குடியிருப்பின் நீச்சல் குளத்திற்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.

இந்தக் குடியிருப்பில் சுமார் 4 மாதங்களாக அப்பெண் தனியாக தங்கியிருக்கிறார் என என பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி முகமட் சானி சே டின் சாயிட் தெரிவித்தார்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவருடன் மலேசியாவிற்கு வந்துள்ளார். மலேசியாவை தளமாக கொண்ட ஜாப்பானிய நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இரண்டு ஆண்டுகள் இங்கு வேலை செய்து ஓய்வு பெற்றார். அண்மையில், ஜப்பானின் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமையகத்திற்கு அவரது கணவர் வேலை மாற்றம் செய்யப்பட்டார் என முகமட் சானி தெரிவித்தார்.

இதற்கு முன்னர் அந்தப் பெண் பங்சாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்ததாக தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தற்போது அப்பெண்ணின் உடல் சவப்பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன