திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > கேளிக்கை மைத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம்
முதன்மைச் செய்திகள்

கேளிக்கை மைத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம்

கோலாலம்பூர், ஜூலை 14
செராஸ், தாமான் மலூரியிலுள்ள ஒரு கேளிக்கை மையத்தின் அருகே நேற்றிரவு 26 முறை துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர், டத்தோஸ்ரீ மஸ்லான் லாஸிம் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசுக்கு இரவு 9.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் 5.56 மில்லி மீட்டர் நீளம் கொண்ட 26 தோட்டா உறைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று இன்று வெளியிட்ட அறிக்கையின் மூலம் மஸ்லான் தெரிவித்தார்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 18 தாள்களில் 2 சீன ஆடவர்களின் புகைப்படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பொருட்கள் யாவும் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த இடத்திலிருந்து 22 மீட்டர் தூரம் வரையில் கண்டெடுக்கப்பட்டன.

எனவே, சுற்றுப் பகுதியில் உள்ள ரகசிய கண்காடிப்பு கேமராவை ஆய்வுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மஸ்லான் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன