கோலாலம்பூர், ஜூலை 17
ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரியின் விகிதம் சுழிய நிலைக்குக் கொண்டு வரப்பட்டாலும் பொருள்களின் விலை இன்னமும் குறையாமல் இருப்பதால் மக்கள் வருத்தப்படுவதாக முன்னாள் பிரதமர், டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.

ஒரு சில பொருள்களின் விலை குறைந்திருக்கிறது. ஆனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை குறையவில்லை. அதோடு, சில பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.

பக்காத்தான் ஹாராப்பான் தேர்தல் கொள்கை அறிக்கையில் உறுதியளித்ததை போன்று பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை. இதில் எஸ்எஸ்டியை அறிமுகப்படுத்துவதால் பொருள்களின் விலை உயரலாம் என்று மக்கள் அஞ்சுவதாக அவர் கூறினார்.

இவ்விவகாரத்தை மக்களவைக் கூட்டத்திற்குக் தாம் கொண்டுச் செல்லப்போவதாக 4ஆவது நாடாளுமன்றத்தின் முதல் தவணைக்கான கூட்டத்தை மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் V தொடக்கி வைத்த நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் நஜீப் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிலையில், எஸ்எஸ்டியை அமல்படுத்துவதால் மக்களின் வாழ்க்கைச் செலவினங்கள் பாதிக்கப்படும். இதனால் பொருள்களின் விலையை அரசு குறைக்கும் என்று நிறைவேற்றப்படாமல் போகலாம் என நஜீப் மேலும் சொன்னார்.