சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இலக்கியம் > தேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை
இலக்கியம்சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை

ஜித்ரா, ஜூலை 18-

தமிழ்ப்பள்ளளி ஆசிரியர்களின் தரம் மற்ற இனப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக உள்ளது என கூறும் நிலையில், தலைசிறந்தவர்களாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் விளங்கிறார்கள் என்பதற்கு பல சாதனைகளை அவர்கள் தொடர்ந்து புரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த ஜூலை 16 -17, டாருல் ஆமான் ஆசிரியர் கல்விக் கழகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான புத்தாக்கப் போட்டியில் செப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த ஆசிரியர் செல்வா இலெட்சுமணன், முனிதா துலுக்கண்ணம், கவித்ரா வாசுதேவன் மற்றும் சுங்கை குருயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த ஆசிரியர் நரேஸ் தேவதாஸ் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றனர்.

படிநிலை ஒன்றின் அறிவியல் பாடப்பகுதியை உயர்நிலை சிந்தனை வரைப்படத்தில் உட்புகுத்தி அதனை QR CODE இன் மூலம் கற்பிக்கும் முறை தொடர்பாக புத்தாக்கப் புத்தகத்தை உருவாக்கி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர். இப்போட்டியில் மொத்தம் 264 குழுக்கள் பங்கெடுத்த வேளையில், ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியர் குழு இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர்களுடன் பெர்மாஸ் ஜாயா 5 தேசிய பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் நித்தியாவதி சந்திரா, ஜொகூர் ஜாயா 1 தேசிய பள்ளியைச் சேர்ந்த பிரேமலதா தனபாலன்,  தாமான் புக்கிட் கெம்பாஸ் தேசிய பள்ளியைச் சேர்ந்த வேலன்ராஜ் நேரு, தாமான் தாசிக் அம்பாங் தேசிய பள்ளியைச் சேர்ந்த துர்கா தேவி கலையரசு ஆகியோரும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

One thought on “தேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை

  1. Harishnee a/p Madavan

    Harishnee a/p Madavan . Age : 17 . From SMK Valdor , Penang

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன