வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > வாய்பேச முடியாத காது கேளாத மாணவியிடம் 17 பேர் பலாத்காரம் – சென்னையில் பயங்கரம்!
இந்தியா/ ஈழம்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

வாய்பேச முடியாத காது கேளாத மாணவியிடம் 17 பேர் பலாத்காரம் – சென்னையில் பயங்கரம்!

சென்னை, ஜூலை 18-
சென்னை அயனாவரத்தில் வாய் பேசமுடியாத காது கேளாத 7ஆம் வகுப்பு மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 7 மாதத்தில் 17 பேர் பலாத்காரம் செய்த கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பவம் குறித்து பலர் தங்களின் ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்தியா முழுவதுமே பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து வருகின்றது. . இந்நிலையில் சென்னையில் 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 7 மாதங்களாக 17 பேர் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பொது மக்களை குலை நடுங்கச் செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்

அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் காது கேட்காத, சரியாக வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி என அறியப்படுகின்றது.

சிறுமி தனியாக இருக்கும் நேரங்களில், அடுக்குமாடி குடியிருப்பின் காவலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடந்து வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் அங்கு பணிபுரியும் லிப்ட் ஆஃப்ரேட்டர், பிளம்பர், காவலர் என மற்றவர்களுக்கும் தெரியவர அவர்களும் சிறுமியை பங்குபோட்டுள்ளனர். மொத்தம் 17 பேர் சிறுமியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையடுத்து உடனே அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்த காவலர்கள் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை கக்கிய நிலையில் காவலாளிகள், பிளம்பர், லிப்ட் ஆபரேட்டர், தண்ணீர் கேன் போடுபவர் என 18 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன