வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில், துணை தலைவர் பதவியை தற்காக்க போவவில்லை!
அரசியல்முதன்மைச் செய்திகள்

இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில், துணை தலைவர் பதவியை தற்காக்க போவவில்லை!

கோலாலம்பூர், ஜூலை 18-

மஇகாவின் உச்சமன்ற பதவிக்கான தேர்தலில் தாம் துணைத் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ளப்போவதில்லையென டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி திட்டவட்டமாக கூறினார். 60 வயதை கடந்த நிலையில் வருங்கால சமுதாயத்தினருக்கு வழிவிடும் வகையில் தாம் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் அறிவித்தார்.

முன்னதாக கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்திற்கு தம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறிய அவர் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையிலும் தொடர்ந்து ஈடுபடுவதாக கூறினார். உருமாற்றத்தை நோக்கி கட்சி பயனிக்கவேண்டிய முக்கியமான காலக்கட்டமிது. இத்தருணத்தில் அடுத்த தலைமுறைக்கு வழிவிடுவதால் நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை நம்மால் கொண்டு வரமுடியும்.

துணைத் தலைவர் பதவியை தற்காக்க போவதில்லை என்பதால் கட்சியிலிருந்து நான் விலகிவிட்டதாக அர்த்தமில்லை. தொடர்ந்து மஇகாவில் தான் இணைந்திருப்பேன். மஇகாவின் உறுப்பினர் என்ற அடையாளத்துடன் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன