அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் -ஙா கோர் மிங்
முதன்மைச் செய்திகள்

வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் -ஙா கோர் மிங்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19
அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் என்று துணை சபாநாயகர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

இதில் மக்களவைக் கூட்டம் நடைபெறாத போது அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

உண்மையில் அமைச்சரவைக் கூட்டத்திற்குச் சென்ற காரணத்தினால் மக்களவையில் அரசு நாற்காலி வரிசை புதன்கிழமை காலியாய் இருந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

அடுத்த வாரம் தொடங்கி இக்கூட்டம் புதன்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்படும்.

யாரும் தங்களின் பணியை அலட்சியப்படுத்துவதை தாம் விரும்பவில்லை என்றும் நாடாளுமன்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் ஙா தெரிவித்தார்.

One thought on “வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் -ஙா கோர் மிங்

  1. கண்ணதாசன் கிருட்டிணன்

    நான் அனேகனின் தீவிர வாசகன். அனேகன் மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள். சமீப காலமாக அனேகனின் செய்திகளில் எழுத்துப் பிழைகள் அதிகம் இருப்பதாக உணர்கிறேன். ஆகவே இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளவும்.நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன