அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பலாக்கோங்கில் தேமு போட்டியிடும்! டத்தோஶ்ரீ ஸாஹிட் உறுதி
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

பலாக்கோங்கில் தேமு போட்டியிடும்! டத்தோஶ்ரீ ஸாஹிட் உறுதி

கோலாலம்பூர், ஜூலை –

பலாக்கோங் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி போட்டியிடுமென அதன் தலைவர் டத்தோஶ்ரீ ஸாஹிட் அமிடி திட்டவட்டமாகக் கூறினார்.

பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் ஹெடி எங் சாலை விபத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தேசிய முன்னணி சார்ப்பில் அத்தொகுதியில் வேட்பாளர் நிச்சயம் நிறுத்தப்படுவார் என ஸாஹிட் கூறியுள்ளார்.

தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு பிறகு யார் வேட்பாளர் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படுமென ஸாஹிட் தெரிவித்தார். கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் பலாக்கோங் தொகுதியில் போட்டியிட்டு மசீச படுதோல்வி கண்டது. குறிப்பாக 10.9 விழுக்காடு வாக்குகளை மட்டுமே அது பெற்றது.

இந்நிலையில் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்துரைக்க மசீச தலைவர் டத்தோ வீ கா சியோங் மறுத்துவிட்டார். தேசிய முன்னணி கூட்டணியில் அம்னோ, மசீச, மஇகா என 3 கட்சிகள் மட்டுமே உள்ளன.

2008ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு பலாக்கோங் மசீசவின் கோட்டையாகத் திகழ்ந்தது. ஆனால் அதன் பிறகு 3 தவணையாக இத்தொகுதியில் மசீச தொடர்ந்து தோல்வியை எதிர்நோக்கி வருகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன