திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > பள்ளி மாணவர்களுக்கு கருப்புக் காலணி; ஓராண்டு அவகாசம் வழங்கப்படும்
முதன்மைச் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கருப்புக் காலணி; ஓராண்டு அவகாசம் வழங்கப்படும்

குளுவாங், ஜூலை 21
பள்ளி மாணவர்கள் கருப்புக் காலணி அணியவேண்டும் எனும் நடைமுறையை அமல்படுத்துவதற்கு ஓர் ஆண்டு அவகாசம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் கருப்புக் காலணி அணிவது அடுத்தாண்டு அமலுக்கு வரும். இருப்பினும், பெற்றோரின் சுமையை கருத்தில் கொண்டு இதை அமல்படுத்த ஓர் ஆண்டு அவகாசம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

உடனடியாக இந்த நடைமுறையை கல்வி அமைச்சு அமல்படுத்தினால் பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பினர் பல பிரச்னையை சந்திக்க நேரிடும். குறைந்த வருமானம் பெறக்கூடிய பெற்றோர், குடும்பங்களின் நிலையை அமைச்சு அறிந்துள்ளது. எனவே, கருப்புக் காலணிக்கு மாற புதிய நடைமுறையை அமைச்சு உடனடியாக அமல்படுத்தாது என்று குளுவாங்கில் சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
.
ஓர் ஆண்டு அவகாசம் வழங்கப்படுவதால் அடுத்தாண்டு வெள்ளைக் காலணியை பயன்படுத்தும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அவர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன