ஆகஸ்ட் இறுதிக்குள் சட்டவிரோதக் குடியேறிகள் முறியடிக்கப்படுவர்- டத்தோஸ்ரீ முஸ்தபார் அலி

0
10

குவாந்தான், ஜூலை 21
எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி மலேசியாவை சட்டவிரோதக் குடியேறிகள் இல்லாத நாடாக மாற்ற
குடிநுழைவுத் துறை முடிவு செய்துள்ளதாக அதன் தலைமை
இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தபார் அலி தெரிவித்தார்.

அன்றைய தேதியிலிருந்து இவர்களை தடுத்து வைப்பதற்குக் குடிநுழைவுத் துறை தீவிர நடவடிக்கை எடுக்கும் என்றும் அதில் அவர்களை வேலைக்கு வைத்திருந்த முதலாளிமார்களும் உட்படுத்தப்படுவர் என அவர் குறிப்பிட்டார்.

இதில் தன்னார்வ முறையில் சரணடையும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குடிநுழைவுத்துறை நடவடிக்கை எடுப்பதற்கு முன் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று டத்தோஸ்ரீ முஸ்தபார் அலி தெரிவித்தார்.

கடந்த 1ஆம் தேதி தொடங்கப்பட்ட ஒப்ஸ் மெகா சோதனை நடவடிக்கையின் வழி நாடு முழுவதும் இதுவரை 3,000க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.