புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > குறைந்தபட்ச சம்பளம் விவகாரத்தில் அரசு உறுதியாக உள்ளது! – மாபுஸ் ஒமார்
அரசியல்முதன்மைச் செய்திகள்

குறைந்தபட்ச சம்பளம் விவகாரத்தில் அரசு உறுதியாக உள்ளது! – மாபுஸ் ஒமார்

அலோர்ஸ்டார், ஜூலை 22-

பக்காத்தான் ஹாராப்பான் தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டபடி தனியார் துறைகளுக்கான புதிய குறைந்தபட்ச சம்பளமான வெ.1,500ஐ அமல்படுத்த அரசு அதிக உறுதியோடு உள்ளது என மனித வளத் துணை அமைச்சர், டத்தோ மாபுஸ் ஒமார் தெரிவித்தார்.

ஆனால் இந்த வாக்குறுதி ஒன்றும் 100 நாள் காலக் கட்டத்தில் நிறைவேற்றக்கூடியது அல்ல, மாறாக 5 ஆண்டு காலக் கட்டத்தில் அமல்படுத்தக்கூடியதாகும் என்பதை மக்களுக்கு விளக்கிக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

எனினும், தற்போது இந்தக் குறைந்தபட்ச சம்பள விகிதம் தொடங்கப்பட்டு விட்டதால் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுகுறித்து மறுஆய்வுச் செய்யப்படும் என்று புயல் காற்றினால் வீடு சேதமுற்ற இங்குள்ள கம்போங் பாடாங் லாலாங்கில் பெண் ஒருவருக்கு சொக்சோவின் வெ.2,000 மதிப்புள்ள காசோலையை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் மாபுஸ் குறிப்பிட்டார்.

இதனிடையே, குத்தகைத் தொழிலாளர்கள் மற்றும் பொதுச்சேவைத் துறையில் தற்காலிகமாக வேலை செய்பவர்களுக்கும் முதலாளிமார்கள் சொக்சோ சந்தா செலுத்த வேண்டும் என்று மாபுஸ் வலியுறுத்தினார்.

தற்போது தங்களின் உரிமைகள் பற்றித் தெரியாதக் காரணத்தினால் ஏராளமான குத்தகை மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு சொக்சோ சந்தா செலுத்தப்படாமல் இருக்கலாம்; அல்லது முதலாளிமார்களால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தின் பேரில் இவர்கள் இருக்கலாம்.

அப்படி இதுகுறித்து தொழிலாளர்கள் சொக்சோவில் புகார் செய்தால் அவர்கள் மீது முதலாளிமார்கள் நடவடிக்கை மேற்கொள்வது நியாயமில்லை, ஏனெனில் இது அவர்களின் உரிமையாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு தங்களின் குத்தகை மற்றும் பகுதி நேரத் தொழிலாளர்களுக்கு அனைத்து முதலாளிமார்களும் சொக்சோ சந்தா செலுத்துவதற்கு ஏதுவாக இவ்விவகாரம் குறித்து அமைச்சருடன் தாம் கலந்தாலோசிக்கவிருப்பதாக பொக்கோ செனா தொகுதி எம்.பி.யுமான மாபுஸ் மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன