முகப்பு > முதன்மைச் செய்திகள் > பெரிய நகரங்களில் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னை-டாக்டர் மஸ்லி மாலேக்
முதன்மைச் செய்திகள்

பெரிய நகரங்களில் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னை-டாக்டர் மஸ்லி மாலேக்

குளுவாங், ஜூலை 22
சிலாங்கூர், ஜோகூர் ஆகிய மாநிலங்களிலுள்ள பெரிய நகரங்களில் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னை இருந்து வருவதாக கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலேக் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊரில் உள்ள பள்ளிகளில் பணியாற்ற விரும்புவதால் இந்தப் பிரச்னை ஏற்படுவதாக அவர் சொன்னார்.

ஆசிரியர்கள் பலர் பெரிய நகரங்களிலிருந்து வெளியேறி கிளந்தான், கெடா, பெர்லிஸ் போன்ற மாநிலங்களிலுள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்று அங்கே பணிபுரிய மனு செய்கின்றனர் என அவர் சுட்டிக் காட்டினார்.

இந்நிலை தொடர்ந்து நீடித்தால் நாட்டின் கல்வி முறையை அது பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பெரிய நகரங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவக்கூடிய பகுதிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் மனு செய்வதும் குறைவாக இருக்கின்றது. வேலையிட மாற்றல் பெற்ற ஆசிரியருக்கு பதிலாக அந்த பகுதிகளில் பணிபுரிய மனு செய்யக்கூடிய ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இதனால் ஆசிரியர் பற்றாக்குறை மோசமடைந்திருக்கின்றது என அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண சில வழிமுறைகளை அமைச்சு ஆய்வு செய்து வருகிறது. பெரிய நகரங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான வாழ்க்கைச் செலவின அலவன்ஸ் தொகையை உயர்த்துவதும் அந்த நடவடிக்கைகளில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன