சென்னை, ஜூலை 24-

கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது மக்கள் தொடர்ந்து அதிர்ப்தி அடைந்து வருகிறார்கள். யாஷிகா வெளியேற்றப்படுவார் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாலாஜியின் மனைவி நித்தியா வெளியேற்றப்பட்டார்.

கடந்த வாரம் ஐஸ்வர்யா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் பாடகி ரம்யா என்.எஸ்.கே. வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தாம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு யாரும் வருத்தப்பட வேண்டுமென ரம்யா கூறியுள்ளார். போலியான ஒரு இடத்தில் இருக்க தாம் விரும்பவில்லை என்பதையும் அவர் விடீயோ பதிவின் மூலம் கூறியுள்ளார்.

Thank you so much everybody for all the love and support. Love you all! ❤️

Posted by Ramya NSK on Monday, July 23, 2018

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்கள் யாரை வெளியேற்ற வேண்டுமென்று நினைக்கிறார்களோ அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்கள். இது நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் உள்ளது.

கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில், தவறு செய்தவர்கள், மக்களின் மனங்களை கவராதவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் இம்முறை அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற பட்டியலில் மும்தாஜ், வைஷ்ணவி, யாஷிகா, மஹத் ஆகியோருடன் வழக்கம் போல பொன்னம்பலமும் உள்ளார். இந்த முறை யார் வெளியேற்றப்பட வேண்டுமென்ற மக்களின் முடிவில் மும்தாஜ், யாஷிகா, வைஷ்ணவி, மஹத் என 4 பேர் முதல் வரிசையில் உள்ளனர்.