அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > சனிக்கிழமை அதிகாலையில் சந்திர கிரகணம்! திருக்காப்பிட அவசியமில்லை!
சமூகம்முதன்மைச் செய்திகள்

சனிக்கிழமை அதிகாலையில் சந்திர கிரகணம்! திருக்காப்பிட அவசியமில்லை!

கோலாலம்பூர், ஜூலை 24-

வரும் ஜூலை 28ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழவிருப்பதால் அதற்கு முதல் நாளான ஜூலை 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆலயங்களில் திருக்காப்பு இட அவசியமில்லை என்று மலேசிய இந்து சங்கம் தெளிவுபடுத்தியது.

இந்த 21ஆம் நூற்றாண்டில் அதிக நேரம் நீடிக்கக்கூடிய சந்திர கிரகணம் வரும் 28ஆம் தேதி அதிகாலை 2.24 மணி தொடங்கி காலை 6.19 மணி வரை நீடிக்கும். சந்திர கிரகண நேரத்தில் ஆலயங்கள் திருக்காப்பிட்டு நடை மூடப்படுவது வழக்கமாகும்.

ஆனால் இந்த முறை சந்திர கிரகணம் அதிகாலையில் தொடங்குவதால் வெள்ளிக்கிழமை இரவு பூஜையை வழக்கம்போல் நடத்தலாம் என்று மலேசிய இந்து சங்கத் தேசிய தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன்ஷாண் கூறினார்.

வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் பூஜையை நடத்துவதால் பாதிப்பு ஏதும் வராது. அதே நேரத்தில் ஜூலை 28 ஆம் தேதி சனிக்கிழமை காலை 6.19 மணிக்கு சந்திர கிரகணம் முடிவடைவதால் காலை 7.00 மணிக்கு கோயில்களில் புண்ணியாகவாசனம் மற்றும் அபிஷேகம் செய்து வழக்கம்போல் பூஜைகள் நடத்தலாம் என்று இந்து சங்கம் ஆலோசனை கூறியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன