சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மக்களவை கூட்டம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு!
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

மக்களவை கூட்டம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு!

கோலாலம்பூர், ஜூலை 24-

நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற கூட்டம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று மதிய வேளைக்குப் பிறகு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது சரவா பிபிபி கட்சியின் காபிட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அலெக்ஸ்சன்டர் நந்தால் லிங்கி எழுந்து போதுமான உறுப்பினர்கள் இல்லை என்பதால் கூட்டத்தின் விதிமுறை குறித்து கேள்வி எழுப்பினார்.

அதன்பிறகு பிற்பகலில் போதுமான உறுப்பினர்கள் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக நாடாளுமன்ற கூட்டத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபா நாயகர் டத்தோ முகமட் அரிப் முகமட் யூசோப் கூறினார்.
அப்போது தேசிய முன்னணி கோல கிராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இஸ்மாயில் முகமட் சைட் அரசாங்க ஆதரவாளரை சாடினார்.

நேற்றுதான் பிரதமர் வெளிப்படையாக இதுகுறித்து கருத்துரைத்தார் என்று அவர் சொன்னார். அதன்பிறகு 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இன்று மதியம் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்லாதது தொடர்பில் நேற்று டாக்டர் மகாதீர் தமது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன