சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > 2018 உலகின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் விருதுக்கு எம்பாப்பே, மொட்ரிக் பரிந்துரை !
விளையாட்டு

2018 உலகின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் விருதுக்கு எம்பாப்பே, மொட்ரிக் பரிந்துரை !

லண்டன், ஜூலை.25  –

2018 ஆம் ஆண்டுக்கான ஃபிபா சிறந்த கால்பந்து ஆட்டக்காரருக்கான விருதுக்கு பிரான்சின் இளம் ஆட்டக்காரர் கிலியான் எம்பாப்பே, குரோஷியாவின் லுக்கா மொட்ரிச்சின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இறுதி 10 ஆட்டக்காரர்கள் பட்டியலில் அவ்விருவரும் இடம்பெற்றுள்ளனர்.

உலகின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரருக்கான ஃபிபா விருதைத் தொடர்ச்சியாக இரண்டு முறை வென்றுள்ள போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பார்சிலோனாவின் லியோனெல் மெஸ்சியும் வழக்கம் போல் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆட்டக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  ஆனால் பிரேசிலின் நெய்மார் இந்த பட்டியலில் இருந்து விடுப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு வரை உலகின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரருக்கு பலான் டி ஆர் விருது வழங்கப்பட்டது. ஃபிபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனம் , அந்த விருதில் இருந்து விலகிக் கொண்டப் பின்னர் தனியே, ஃபிபா சிறந்த ஆட்டக்காரர் விருதை வழங்கி வருகிறது. 2017 ஆம் ஆண்டில் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி 2018 ஜூலை 15 ஆம் தேதி வரை ஆட்டக்காரர்கள் மதிப்பிடப்படுகின்றனர்.

இந்த கால கட்டத்தில் மொட்ரிச், ரியல் மாட்ரிட்டுடன் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றதுடன் குரோஷியாவை, 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். ரியல் மாட்ரிட்டின் தற்காப்பு ஆட்டக்காரர் ரஃபெல் வரேன், சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றதுடன் உலகக் கிண்ணத்தையும் வென்றுள்ளார்.  அவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில் லிவர்பூலின் முஹமட் சாலாவும் இடம்பெற்றிருக்கிறார். கடந்த பருவத்தில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் 38 ஆட்டங்களில் சாலா 32 கோல்களை அடித்தார் என்பது குறிப்பிடதக்கது. 10 ஆட்டக்காரர்கள் இடம்பெற்றிருக்கும் பட்டியலில் வரும் செப்டம்பர் மாதம் 3 ஆக சுருக்கப்படும்.

வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி லண்டனில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஃபிபா சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் அறிவிக்கப்படவிருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன