கோலாலம்பூர், ஜூலை 25-

வெளிநாடுவாழ் மலேசியர்கள் ஹாராப்பான் நிதியத்திற்கு வெ.1 கோடிக்கும் மேல் நிதியுதவி செய்திருப்பதாக துணை நிதியமைச்சர், டத்தோ அமிருடின் ஹம்சா கூறியுள்ளார் .

இந்த நிதியுதவித் திட்டத்திற்கு இன்னும் அதிகமான மலேசியர்கள் உதவ முன்வந்துக் கொண்டிருக்கின்றனர். இதில் வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களின் நிதியுதவியும் அடங்கும் என அவர் மேலும் சொன்னார்.

இதனிடையே இந்த நிதியத்திற்கு வெ.1 கோடிக்கும் மேல் அவர்கள் நிதியுதவி செய்திருக்கிறார்கள் என மக்களவையில் நடைபெற்ற அமைச்சர்களுக்கானக் கேள்வி நேரத்தில் புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் போங் குய் லுன்னின் கேள்விக்கு அமிருடின் பதிலளித்தார்.

இதில் நேற்று வரை கிடைத்த 289,002 ஆன்லைன் நிதியுதவிகளும் பதிவுச் செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் அன்றைய தினம் வரை வெ.16,1896,353.60 இதற்குத் திரட்டப்பட்டு உள்ளது. இந்நிதி அனைத்தும் மத்திய அரசின் கடனை அடைக்கப் பயன்படுத்தப்படும் என்று அமிருடின் மேலும் கூறினார்.